மாணாக்கரே!
இது அறிவுரை என்று மட்டும்தயவு செய்து எண்ணி விடாதீர்கள்
நான் அனுபவித்தவை
நேரத்தை முந்திக்கொண்டு
நீங்கள் ஓடுங்கள்
காலம் வெல்லும் முன்
காலத்தை வெல்லாம்
உறக்கத்தை உறங்க விட்டு
எண்ணங்களை எழுப்பிடுங்கள்
எதிர் காலத்தை அது சமைக்கும்
அப்போதும் ஓயாதீர்கள்
புத்தியைத் தீட்டுவது
புத்தகங்கள் மட்டுமல்ல
புதியவைகளும் தான்
தேடிக் கற்க திண்ணம் கொள்ளுங்கள்
அப்போது தெரியாது என சொல்ல
தேவையிருக்காது
பண்பற்ற கல்வியால்
பயனேதும் இல்லை
பண்பட்ட நடத்தைகளை காட்டுவதை
பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்
பல இதயங்களை சம்பாதிக்கலாம்
இது போதும் எனாது தேடலில்
இன்னும் இன்னும் என்றிடுங்கள்
எல்லோராலும் விரும்பப்படுவீர்கள்
நடப்பறிந்து நண்பரை
தேறுங்கள் விணை
வந்து சேர வாய்ப்பிருக்காது.