இலங்கையானது
மத்திய கோட்டிற்கு அண்ணளவாக 90 பாகை வடக்கே
அமைந்துள்ள அயனமண்டல தீவாகும். பூமியில் இலங்கையின் அமைவிடத்தை சரியாகக்
குறிப்பிடுவதெனில் கிறீன்வீச் கோட்டிற்கு (0 பாகை நெடுங்கோட்டிற்கு) 80 பாகை – 82 பாகை கிழக்கில் மத்திய கோட்டிற்கு 5 பாகை – 10 பாகை வடக்கில் அமைந்துள்ளது.
புவியின்
அயனமண்டல பிரதேசத்தில் இலங்கை அமைந்திருப்பதால் இங்கு வெப்பநிலை சற்று உயர்வாகக்
காணப்படுகின்றது. மேலும் வருடம் முழுவதும் பெறுமளவுக்கு மாற்றமடையாத சீரான
வெப்பநிலை காணப்படுகின்றது. கடற்கரையை அண்மித்த பிரதேசங்களில் சூழல் வெப்பநிலை
உயர்வாகவும் கடற்கரையிலிருந்து உள்நோக்கி மத்திய பிரதேசத்தை நோக்கிச் செல்லும்
போது சூழல் வெப்பநிலை குறைந்தும் செல்கிறது. எனினும் மழைவீழ்ச்சி ஏனைய பிரதேசங்களை
விட மத்திய பிரதேசத்திலே அதிகமாகக் காணப்படுகின்றது.
இலங்கையின்
தரைத்தோற்றத்தை பொறுத்தவரையில் சமவெளிப்பிரதேசங்கள், மலைப்பிரதேசங்கள், குன்றுகள், மேட்டு நிலங்கள் என பல்வேறுப்பட்ட தரைத்தோற்ற
அம்சங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு வேறுபட்ட காலநிலை காரணிகள் மற்றும் தரைத்தோற்ற
அம்சங்கள் காரணமாக இலங்கையில் பல்வேறு விதமான சூழல் தொகுதிகள் அமைந்துள்ளன. இவற்றை
பிரதானமாக நான்கு வகைப்படுத்தலாம். அவையாவன,
1. காடுகள்
2. புல் நிலங்கள்
3. ஈர நிலங்கள்
4. கடற்கரைக்குரிய சூழல் தொகுதிகள்
காடுகளை
பொறுத்தவரையில் அடர்ந்தக் காடுகளும் ஐதான காடுகளும்
காணப்படுகின்றன. எனினும் காட்டுச் சூழல் தொகுதிகள் என கருதும் போது இவற்றைப்
பின்வருமாறு மேலும் வகைப்படுத்தலாம்.
1. அயனமண்டல மழைக்காடுகள் (Tropical Rain Forest)
2. அயனமண்டல பருவக்காற்று காடுகள் (Tropical monsoon Forests)
3. அயனமண்டல மலைக்காடுகள் (Tropical Mountain Forest)
4. அயனமண்டல இடை வலயக்காடுகள் (Tropical intermediate zone Forest)
5. அயனமண்டல முற்புதர் காடுகள் (Tropical thorn Forest)
6. அயனமண்டல சவன்னா காடுகள் (Tropical savanna Forest)
இச்சூழல்
தொகுதிகளை பொருத்தவரையில் அயன மண்டல மழைக்காடுகளில் அதிகளவான உயிர் பல்வகைமை
காணப்படுவதோடு இவற்றின் பரம்பல் இலங்கையின் தாழ்நாட்டு ஈரவலயத்திலும் மலைநாட்டு ஈர
வலயத்திலும் காணப்படுகின்றன. எனினும் மத்திய மலைநாட்டில் அதிகளவில் காணப்படுவது
அயனமண்டல மலைக்காடுகள் ஆகும். இலங்iயில் அதிகளவில்
காணப்படும் காடுகள் அயனமண்டல பருவக்காற்று காடுகள் ஆகும். இவை உலர்
கலப்பினக்காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. யால, வில்பத்து ஆகிய
தேசிய வனங்களின் சில பகுதிகளிலும் இக்காடுகளை காண முடியும். எனினும் இவ்வனங்களின்
பெரும்பகுதி அயன மண்டல முற்புதர் காடுகளால் சூழப்பட்டுள்ளது. அயன மண்டல சவானாக்
காடுகளின் பரம்பல் பிபிலை, லுணுகலை, அம்பாறை போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன.
புல் நிலங்களை
பொருத்த வரையில் மலைநாட்டு புல் நிலங்கள், தாழ் நாட்டு புல் நிலங்கள் என வகைப்படுத்த முடியும். மலைநாட்டில் ஈரப்பத்தனை
மற்றும் உலர்ப்பத்தனை ஆகிய புல் நிலங்கள் காணப்படுகின்றன. அருவிகள், ஆறுகள், சேற்று நிலங்கள், வாவிகள் என்பன ஈர நிலங்களுக்குரிய சூழற்
தொகுதிகளாகும். ஆற்றங்கரைகளில் ஆற்றோரக் காடுகள் (சுiஎநசiநெ குழசநளவள) காணப்படுகின்றன. கடற்கரைக்குரிய சூழற்தொகுதிகள் மிகவும்
வித்தியாசமானவை. இதில் களப்புக்கள், கண்டல்கள் (Mangroves), முருங்கை கற்பாறைகள் போன்றன அடங்குகின்றன.
மேலே
விபரிக்கப்பட்டவை யாவும் இயற்கையாகவே அமைந்த சூழற்தொகுதிகளாகும். எனினும் மனிதனால்
உருவாக்கப்பட்ட சில சூழற் தொகுதிகளும் இலங்கையில் காணப்படுகின்றன. இவற்றுள்
செயற்கையாக நிர்மானிக்கப்பட்ட குளங்கள், பயிர்ச்செய்கை நிலங்கள், வீட்டுத்தோட்டங்கள்
என்பன அடங்குகின்றன.