Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts
தமிழில் கணிதம் - ப.விஜயகாந்தன்
நன்றி - www.wikipedia.org
தற்காலத்தில் தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன.
ஆசிரியர்களுக்கான ஒழுக்க விழுமிய முறைமை பற்றிய பொதுச் சட்டத் தொகுப்பு - ஏ . எல் . எம் . முக்தார்
அரசாங்க சேவையில் மிகக் கூடிய எண்ணிக்கையினராக உள்ள ஆசிரியர்கள் தாம் வாழும் சமூகத்தில் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து பேணப்பட வேண்டி யவர்கள். இவ்வாறு சமூகத்தில் உயர்ந்த தரத்தில் பேணப்படுவதற்கு ஒவ்வொரு ஆசிரியரும் தனிப்பட்ட ரீதியில் மிகவும் ஒழுக்க சீலர்களாக இருத்தல் வேண்டும் என கல்வி அமைச்சும் சமூகமும் எதிர்பார்க்கின்றன.
சி.வி. வேலுப்பிள்ளையின் பன்முக ஆளுமையும் பணிகளும் (நினைவுரை) - மல்லியப்புசந்தி திலகர்
இலங்கை ஆங்கில மற்றும் தமிழ் இலக்கியம் குறிப்பாக மலையக இலக்கியம் பற்றி உரையாட முற்படும்போது யாருமே தவிர்த்துவிட்டுப் போக முடியாத ஆளுமையாக திகழ்பவர் சி.வி வேலுப்பிள்ளை அவர்கள். இந்த வருடம் அவரது நூற்றாண்டு ஜனன நினைவு. இருக்கின்ற போது சிலர் நூறு வயதை கடந்துவிடுகிறார்கள். இறந்த பிறகு எல்லோருமே 100 வயதை அடையத்தான் செய்கிறார்கள். ஆனால் மறைந்து ஒரு சில வருடங்களிலேயே பலரையும் மறந்து விடுகிறோம். நமது குடும்ப உறவுகளைக் கூட. அதே நேரம் சிலரை ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் மறக்க முடிவதில்லை. அவர்களை ஏதாவது ஒரு வகையில் நினைவு கூருகிறோம்.
பச்சை வீட்டு விளைவு
பச்சை வீட்டு விளைவு என்பது வீட்டில் ஞாயிற்றுக் கதிர் வீசலின் தொழிற்பாட்டை விளக்குவதாக அமைகின்றது. குளிர்ப் பிரதேசங்களில் கடுங் குளிரிலிருந்து இரவில் தாவரங்களைப் பாதுகாப்பதற்கு பச்சை வீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. பச்சை வீட்டின் கூரை மற்றும் சுவர் என்பவற்றினூடாகஉட் செல்லும் சூரிய கதிர்கள் மீண்டும் அதன் உற்பகுதியிலிருந்து வெளியேராதவாறு தாக்கப்படுவதால் உட்பாகத்தின் வெப்பம் வெளிப்புறச் சூழலை விட அதிகரிக்கின்றது. இது போன்ற செயலை வளிமண்டலம் ஆற்றுகின்ற காரணத்தினால் அதனை பச்சை வீட்டு விளைவு என்பர்.
Subscribe to:
Posts (Atom)