ஆசிரியர்களுக்கான ஒழுக்க விழுமிய முறைமை பற்றிய பொதுச் சட்டத் தொகுப்பு - ஏ . எல் . எம் . முக்தார்

அரசாங்க சேவையில் மிகக் கூடிய எண்ணிக்கையினராக உள்ள ஆசிரியர்கள் தாம் வாழும் சமூகத்தில் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து பேணப்பட வேண்டி யவர்கள். இவ்வாறு சமூகத்தில் உயர்ந்த தரத்தில் பேணப்படுவதற்கு ஒவ்வொரு ஆசிரியரும் தனிப்பட்ட ரீதியில் மிகவும் ஒழுக்க சீலர்களாக இருத்தல் வேண்டும் என கல்வி அமைச்சும் சமூகமும் எதிர்பார்க்கின்றன.


தற்போது நடைமுறையிலுள்ள ஆசிரியர் சேவையை மேலும் அர்த்தமுள்ளதாக் கும் வகையில் கல்வி அமைச்சு 2012/37ம் இலக்க சுற்று நிருபம் மூலம் ஆசிரியர்களுக்கான ஒழுக்கவியல் கோவை ஒன்றை முதல் தடவையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை சகல ஆசிரியர்களும் அறிந்துகொள்ளும் நோக்கில் அது பிரசுரிக்கப்படுகிறது.

அறிமுகம்

சகல பிள்ளைகளிடமும் இருக்க வேண்டிய பண்புசார் கல்வியினைப் பெற்றுக் கொள்வதற்கான அடிப்படை உரிமையினைப் பாதுகாக்கக் கூடிய வாறு சிறுவர் உரிமைக் கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப உரிய சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களது ஆளுமையை விருத்தி செய்ய பங் களிப்புச் செய்வது சகல ஆசிரியர்களி னதும் பொறுப்புக்கள் ஆகும்.

ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவர் களின் இடம்சார் பெற்றோர் (ழிoணீo-ஜிarலீnts) என்ற சட்ட ரீதியான யோசனைகளுக்கு அமைய மாணவர் களின் நலனுக்காகச் செயற்படச் சகல ஆசிரியர்களும் கட்டுப்பட்டுள்ளனர்.

தொழில்சார் உயர் தரத்தினை உறுதி செய்யக் கூடியவாறு மற்றும் பொது மக்கள் தம்மீது காண்பிக்கும் கெளர வத்தினை உறுதி செய்யக் கூடியவாறு தொழில்சார் ஒழுக்க நெறிகள் தம்மால் தயாரிக்கப்பட்டுப் பின்பற்றப்படுவது தொழில்சார் தரத்தின் தேவையாகக் கருதப்படுகின்றது.

தமது செயற்பாடுகளை நிறைவேற் றும்போது எடுக்கப்படும் தீர்வுகள் ஊடாகத் தாம் அனுபவிக்கும் மட்டற்ற சுயாதீனத்தினை அடிப்படையாகக் கொண்டு விழுமியம் சார் தரங்கள் தம்மால் பேணப்பட்டு அதற்கமையச் செயற்படுவது மிக முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும்.

சமூக முறைமையின் நேரடிப் பங்காளர்களாக ஆசிரியர்களுக்குள்ள செயற்பாட்டுப் பணிகள் மற்றும் ஆசிரிய தொழில்சார் தரத்தினை இனங்காண்பதற்கும் வழிகாட்டுவதற்கும் ஆசிரியர்களிடம் இருக்க வேண்டிய சுய வழிகாட்டல்கள் மற்றும் சுய ஒழுக்கங்களின் முக்கியத்துவத்தினை அறிமுகப்படுத்துவதற்கும், பல்வேறு பட்ட கால எல்லைக்குள் எடுக்கப்பட்ட முயற்சிகளில் அடைவு மட்டங்கள் உட்படச் சுய விழுமியங்கள், வழிகாட் டல்களுக்காகவும் இந்நூல் தயாரிக்கப் பட்டுள்ளது.

இதனூடாகச் சகல ஆசிரியர்களினா லும் ஏற்றுக்கொள்வதாக எதிர்பார்க்கும் தொழில்சார் சட்டங்களும், விழுமியங் களும் கட்டியெழுப்பப்பட்டுள்ளன.

ஆசிரியத்துவத்திற்காகத் தாபிக்கும் தனியான நிறுவனம் ஒன்றை இவ் விழுமிய முறைமை மற்றும் சட்ட ஒழுங்குகள் தொடர்பில் ஆசிரியர்களை மதிப்பீட்டுக்குள்ளாக்கும் மற்றும் கெளர விக்கும் கருவியாகவும் பாடசாலை முறைமையின் பண்புசார் தரத்தினை விருத்தி செய்ய உபகரண மாகவும் பயன்படுத்த முடியும்.

அங்கீகரிக்கப்பட்ட விழுமிய முறை மைச் சட்டக் கோவை கள் ஊடாக ஆசிரியர்களின் அபிமானத்தைப் பாதுகாப்ப தும் அச்சட்ட ஒழுங்குகளைத் தெரிந்தே மீறுவதற்கு எதிராக ஒழுக்காற்றுச் செயற்பாடுகளை மேற் கொள்வதற்குமான அடிப்படையினைத் தோற்று விப்பதும் இதன் மூலம் எதிர்பார்க்கப் படுகின்றது.

ஆசிரியர்களின் ஒழுக்க விழுமியச் செயற்பாடுகள் தொடர் பான விழுமியத் தொகுப்பு முறைமை மற்றும் சட்ட ஒழுங்குகளில் குறிப்பிடப்பட் டுள்ள தரங்கள், நியாயங்கள் மற்றும் வாசகங் களுக்காகவும் வழங்கப்பட்டுள்ள இலக்கங்களுக்கு அமையத் தேவையானவாறு சுருக்க மான விளக்கங்களை வழங்க முடியும்.

1.0 உத்தியோகபூர்வ பெயர்

இவ்வாணத்தைப் பண்புசார் கல்வி யின் நோக்கத்தினை எட்டுவதற்காக ஆசிரியர்களின் விழுமியச் செயற்பாடு கள் தொடர்பான விழுமியக் கோவை கள் மற்றும் சட்டக் கோவையாக அறிமுகப்படுத்த முடியும். எதிர்காலத் தில் இதனைக் கூட்டாக இணைந்து அல்லது தனித்தனியாகக் குறிப்பிட்டுப் பொதுவான சட்டக் கோவையாக அல்லது விழுமியக் கோவையாகக் கருதப்படும்.

2.0 வரைவிலக்கணம்.

ஆசிரியர் என்று கருதப்படுவோர் மாணவ மாணவிகளின் கல்வி தொடர் பான பொறுப்புக்கள் கொண்ட பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை யில் உள்ள கல்விசார் உத்தியோகத்தர் களேயாவர். ஒழுக்கவிழுமியம் கொண்ட செயற் பாடுகள் தொடர்பான விழுமிய முறை மையாக அறிமுகப்படுத்தப்படு வது தம்மால் தமக்காக விதிக்கப்பட வேண்டிய நேர்மை, பொறுப்பு மற்றும் முன்மாதிரி, சமூகப் பொறுப்புப் போன்ற நபர்கள் ரீதியிலான ஆசிரியர்களின் சமூகம் எதிர்பார்க்கும் சிந்தனை, பொறுப்புக்கள், பழக்க வழக்கங்களாகும்.

சட்டமுறைமை என அறிமுகப்படுத் தப்படுவது சகல ஆசிரியர்களினாலும் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய சட்டக் கோட்பாடுகளாகும்.

3.0 நோக்கங்கள்.

ஆசிரியர்களுக்கான இவ்விழுமியச் செயற்பாடுகள் தொடர்பான கோவை மற்றும் சட்டமுறைமை இரண்டு நோக்கங்களைக் கொண்டமைந்துள்ளன.

i நேர்மை, பொறுப்புணர்ச்சி, தொழில் வாண்மையுடன் முன்மாதிரியான, சமூ கப் பொறுப்புணர்வுள்ள நபராகவும் ஆசிரியர்களினால் மேற்கொள்ள வேண்டிய விழுமிய தரங்கள் ஒழுக்க விழுமிய முறைமையாகச் சமர்ப்பிக்கப் படுகிறது.

ii ஒழுக்கமிக்க செயற்பாடுகளுக்காகச் சகல ஆசிரியர்களுக்கும் பொறுப்புக் கள் வழங்கப்படும் வகையில் சட்ட முறைமை ஒன்றைச் சமர்ப்பித்தல்.

4.0 பொது நோக்கங்கள் மற்றும் அடிப்படைத் தத்துவம்.

பின்பற்றப்பட வேண்டிய சட்ட முறை மைகள் கொண்ட ஒழுக்க விழுமிய முறைமையினைத் தயாரிப்பதன் நோக்க மாக அமைவது பெறுமதி மிக்க தொழி லின் அங்கத்தவர் என்ற வகையில் ஆசிரியரின் கெளரவப் பெயரினைப் பாதுகாப்பதாகும். இவ்விழுமிய முறைமை மூலம் ஆசிரியர்களினால் சுயமான அடிப்படையில் தனக்கு விதித்துக் கொள்ள வேண்டிய விழுமியத்தரங்கள் தயாரிக்கப்பட்டுள்ள போதிலும், இதனை இத்தரங்கள் சேவைக்கான பதவியுயர்வு கள் மற்றும் தேசிய ரீதியில் அங்கீகரிப் பதற்காகவும் மதிப்பீட்டுக்காகவும் பயன் படுத்த முடியும்.

5.0 ஆசிரியர்களின் விழுமியம் மிக்க செயற்பாடுகள் தொடர் பான ஒழுக்க விழுமிய முறை.

ஒழுக்க விழுமியச் செயற்பாடுகள் தொடர்பான ஆசிரிய விழுமியக்கோவை விரிவான முறையில் அமைவது தம்மால் தமக்கு விதிக்கப்பட்டுள்ள செயற்பாடுகளை நேர்மையாகவும்,