இலங்கையை
பொருத்தவரையில் தாழ்நாட்டிலும் பல மலைப்பகுதிகள் காணப்படினும் மலைப்பிரதேசம் என
பொதுவாகக் குறிப்பிடப்படுவது மத்திய மலைநாடாகும். இங்கு பெருமளவிலான தேயிலை
தோட்டங்கள் சூழ்ந்து காணப்படினும் வேறுபட்ட பல சூழல் தொகுதிகளும் காணப்படுகின்றன.
காடுகள், புல் நிலங்கள்,
ஈர நிலங்கள் என சில
முக்கியமான சூழற் தொகுதிகள் இங்கு காணப்படுவதால் இவை அங்கிகளின் இயற்கை
வாழ்விடங்களை அதிகரிக்கச் செய்து அவற்றின் பல்வகைமையையும் (Diversity) அதிகரித்துள்ளன.
இதன் காரணமாகவே மத்திய மலைநாடு இலங்கையின் உயிர்ப்பல்வகைமை (டீழைனiஎநசளவைல) தேக்கத்தில் பெரும் பங்காற்றுகின்றது.
மத்திய
மலைநாட்டில் காணப்படும் காடுகளில் பெரும்பாலாவை மழைக்காடுகளாகும். குறிபாக
பீதுறுதலாகலை, சிவனொளிபாத மலை,
ஹோட்டன் சமவெளி, கிரேட்வெஸ்டன் ஆகிய மலைப்பகுதிகளில் பரந்து
காணப்டும் காடுகள் இவ்வகையான காடுகளாகும். மேலும் மிகவும் உயரம் கூடிய சில
மலைப்பகுதிகளில் காணப்படும் காடுகளில் வளரும் காடுகளில் வளரும் தாவரங்களின் உயரம்
மிகவும் குறுகியதாக காணப்படுவதால் இவை குறள் காடுகள் (Pபைஅல குழசநளவ) என அழைக்கப்படுகின்றன.
புல் நிலங்களை (Grass lands) பொருத்தவரையில்
மத்திய மலைநாட்டில் இரண்டு வகைகள் காணப்படுகின்றன.
1. ஈர பத்தனை புல் நிலம் (Wet Patana)
2. உலர் பத்தனை புல் நிலம் (Dry Pattana)
ஈர பத்தனை புல்
நிலங்கள் மலைநாட்டுக்குரிய ஈர வலயத்தில் (2000 மீட்டரிலும் உயரம் கூடிய பகுதிகள்) குறிப்பாக
ஹோட்டன் சமவெளி, எல்க் சமவெளி,
மூன் சமவெளி (Moon Plains) ஆகிய
பிரதேசங்களை கூறலாம். இப் புல்நிலங்களில் துத்திரிப்புல் எனப்படும் புல்லினம் பெருமளவு பரந்து
காணப்படுகின்றது.
உலர் பத்தனை புல்
நிலங்கள் மலைநாட்டுக்குரிய உலர் வலயத்தில் (1000 - 1500 மீட்டர் உயரமான பகுதிகள்) காணப்படுகின்றன. ஊவா
வடிநிலம் (Uva Basin) வெளிமடை தெனியாய ஆகிய பகுதிகளை இதற்கு உதாரணங்களாக கூற முடியும். இங்கு
மானாப்புல் ஆட்சியுடைய புல்லினமாக அமைகிறது. இப்புல் நிலங்களில் மேய்ச்சல்
விலங்கினங்களை அதிகமாக காண முடியும்.
காடுகள் புல்
நிலங்கள் போலவே மலைநாட்டில் அதிகளிவிலான ஈர நிலங்களையும் காண முடியம். ஆறுகள்,
அருவிகள், சேற்று நிலங்கள் என்பன இதற்கு சில
உதாரணங்களாகும். இவற்றை தவிர மலைநாட்டில் காணப்படும் நீர்வீழ்ச்சிகளும் ஈர நில
தொகுதியை சார்ந்தவையாகும். மத்திய மலைநாட்டில் காணப்படும் ஈரநிலங்களில் சேற்று
நிலங்கள் முக்கியமானவை. இவை பெரும்பாலும் இரண்டு உயர் நிலங்களுக்கிடையில்
உருவானவையாகும். இச்சேற்று நிலங்கள் மழைநீருடன் கழுவி எடுத்து வரப்படுகின்ற போசனை
பதார்த்தங்களின் தேக்கங்களாக அமைந்திருப்பதால் விவசாயிகள் இந்நிலப்பரப்பை
மாற்றியமைத்து தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இச் சூழல்
தொகுதி பெருமளவு அழிவடைந்து வருவதுடன் இங்கு நிலவுகின்ற உயிர் பல்வகைமைக்கும்
பாரிய அச்சுருத்தல் ஏற்பட்டுள்ளது.
மனிதனால்
உருவாக்கப்பட்டுள்ள சூழல் தொகுதிகளில் பயிர்ச்செய்கை நிலங்களும்
விட்டுத்தோட்டங்களும் மலைநாட்டில் அதிகளவில் காணப்படுகின்றன. எனினும் இன்றைய
காலங்களில் இச்சூழல் தொகுதியில் உயிர் பல்வகைமை சிறப்படைந்து காணப்படுவதில்லை.
இதற்கு பிரதான காரணமாக அமைவது அதிகரித்து வரும் விவசாய இரசாயனங்களின் பாவனையாகும்.
எனினும் முன்னைய காலங்களில் வீட்டுத்தோட்டங்கள் பெரும்பாலும் கண்டிய முறைப்படி
பேணப்பட்டமையால் உயிர் பல்வகைமை செறிவடைந்து காணப்பட்டது. இம்முறையில் கலப்பு
தாவரங்கள் பயிரிடப்பட்டு பராமரிக்கப்பட்டன. மலைநாட்டின் தேயிலை தோட்டங்களும் ஒரு
தனிப்பட்ட சூழல் தொகுதியாகும். கடற்கரைக்குரிய சூழல் தொகுதிகளான கண்டல்கள்,
களப்புகள் போன்றன
மலைநாட்டில் இல்லை. இவை தவிர மலைநாட்டில் சிறு குளங்கள் காணப்படுகின்ற போதும்
இயற்கையான பாரிய வாவிகள் காணப்படுவதில்லை. நுவரெலியா பிரதேசத்தில் அமைந்துள்ள
கிரேகரி குளம் (Gregory Lake) கந்தே குளம் என்பன மனிதனால் உருவாக்கப்பட்ட குளங்களாகும்.
அறிந்துக்கொள்வோம்உயிரின மண்டலம் (Global Ecosystem) என்றால் என்ன?
இயற்கைக்குரிய
பல்வேறு சூழல் தொகுதிகளில் ஒன்று மற்றையதுடன் உயரினவியல், பௌதீகவியல், இரசாயனவியல் செயன்முறைகளின் மூலம்
இணைக்கபட்டிருக்கும். இதனால் எமது முழு பூமியையும் ஒரு முழு சூழல் தொகுதியாக கருத
முடியும். ஏனெனில் பூமியின் எந்தவொரு பகுதியும் ஏனைய பகுதிகளிலிருந்து முழுமையாக
தனிமைப்படுத்தப்பட்டிருப்பதில்லை. இப்பூமிக்குரிய சூழல் தொகுதியே உயிரின மண்டலம்
என அழைக்கப்படுகின்றது.