அன்பின் ஆசிரியரே!
என்னைப் பிடிக்கட்டும்பிடிக்காது போகட்டும்
அதுவல்ல......
இதை நான் அப்போதே
கூறியிருக்க வேண்டும்
இப்போதும் கூறாவிட்டால்
என் ஆற்றாமை
அடங்காது போயிருக்கும்
நீங்கள் கணிதத்தில் காட்டாது
நானோ நீரறியாப் பாறைதான் ஆனால்
என் கை வண்ணத்தில் உருவாகும்
ஒவியங்களை நீங்கள் அறிய வாய்ப்பில்லை
ஆங்கிலம் எனக்கு
அடித்துப் போட்டாலும் வரவில்லை
அது எனக்கே தெரியும்
ஒரு பாடலையேனும்
பயிற்றியிருந்தால்
நானும் ஆங்கிலம் பாடியிருப்பேன்.
கனவு கானாதே என்று
திட்டும் போது
ஒரு கதை ஓடிக்கொண்டிருந்ததை
நீங்கள் அறிவீர்களா?
நீங்கள் தமிழில் தான்
பேசுவீர்கள் இருந்தும்
நான் புரிந்து கொண்டதில்லை தவருதான்
எனக்கு சில மொழிகள் புரியும்
விளையாட்;டு, வினோத பேச்சு
ஆக்கம், நடிப்பு இன்னும் பல
இதில் ஏதேனும் ஒரு மொழியில்
பேசியிருந்தால் உங்கள் வினாக்களுக்கு
விடை கிடைத்திருக்கும்.
நான் கோபப்படவில்லை
குறை கூறவும் இல்லை
என் வலியெல்லாம்
நான் யார் என்பதை
நீங்கள் அறியவில்லை என்பதை விட
எனக்கு அறிவிக்கவில்லை என்பதுதான்
என்றுமில்லாத துணிவு
இன்றெப்படி எனக்கு
நீங்கள் கேட்பது புரிகிறது
நான் சாதாரணமானவன் தான்
அதனால் சராசரி மாணவனாவேன்
எனக்குள் இருந்த ஏதோவொன்று
என்னையும் இயக்கி
ஆக்கியிருக்கிறது ஆசானாக
இருப்பினும் நான்
இழந்தவைகள் வெறும்
வாய்ப்புகள் மட்டுமல்ல
என்பதை தயவோடு ஏற்றுக் கொள்ளுங்கள்
இது உங்களுக்கல்ல
எல்லா ஆசான்களுக்கும்....