அரசாங்க சேவையில் மிகக் கூடிய எண்ணிக்கையினராக உள்ள ஆசிரியர்கள் தாம் வாழும் சமூகத்தில் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து பேணப்பட வேண்டி யவர்கள். இவ்வாறு சமூகத்தில் உயர்ந்த தரத்தில் பேணப்படுவதற்கு ஒவ்வொரு ஆசிரியரும் தனிப்பட்ட ரீதியில் மிகவும் ஒழுக்க சீலர்களாக இருத்தல் வேண்டும் என கல்வி அமைச்சும் சமூகமும் எதிர்பார்க்கின்றன.
பாடசாலை அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டம்
கெம்பியன் த.ம.வி, பெற்றோசோ த.வி, எல்டொப்ஸ் த.வி மற்றும் லின்போட் த.வி ஆகிய பாடசாலைகளை ஒன்றிணைத்து பாடசாலை அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டமொன்று இன்று (07.11.2014) கெம்பியன் பாடசாலையில் நடைபெற்றது.
சி.வி. வேலுப்பிள்ளையின் பன்முக ஆளுமையும் பணிகளும் (நினைவுரை) - மல்லியப்புசந்தி திலகர்
இலங்கை ஆங்கில மற்றும் தமிழ் இலக்கியம் குறிப்பாக மலையக இலக்கியம் பற்றி உரையாட முற்படும்போது யாருமே தவிர்த்துவிட்டுப் போக முடியாத ஆளுமையாக திகழ்பவர் சி.வி வேலுப்பிள்ளை அவர்கள். இந்த வருடம் அவரது நூற்றாண்டு ஜனன நினைவு. இருக்கின்ற போது சிலர் நூறு வயதை கடந்துவிடுகிறார்கள். இறந்த பிறகு எல்லோருமே 100 வயதை அடையத்தான் செய்கிறார்கள். ஆனால் மறைந்து ஒரு சில வருடங்களிலேயே பலரையும் மறந்து விடுகிறோம். நமது குடும்ப உறவுகளைக் கூட. அதே நேரம் சிலரை ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் மறக்க முடிவதில்லை. அவர்களை ஏதாவது ஒரு வகையில் நினைவு கூருகிறோம்.
சுப்பிரமணிய பாரதி
சுப்பிரமணிய பாரதி (சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி) (திசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.
பச்சை வீட்டு விளைவு
பச்சை வீட்டு விளைவு என்பது வீட்டில் ஞாயிற்றுக் கதிர் வீசலின் தொழிற்பாட்டை விளக்குவதாக அமைகின்றது. குளிர்ப் பிரதேசங்களில் கடுங் குளிரிலிருந்து இரவில் தாவரங்களைப் பாதுகாப்பதற்கு பச்சை வீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. பச்சை வீட்டின் கூரை மற்றும் சுவர் என்பவற்றினூடாகஉட் செல்லும் சூரிய கதிர்கள் மீண்டும் அதன் உற்பகுதியிலிருந்து வெளியேராதவாறு தாக்கப்படுவதால் உட்பாகத்தின் வெப்பம் வெளிப்புறச் சூழலை விட அதிகரிக்கின்றது. இது போன்ற செயலை வளிமண்டலம் ஆற்றுகின்ற காரணத்தினால் அதனை பச்சை வீட்டு விளைவு என்பர்.
Subscribe to:
Posts (Atom)